உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பாகிஸ்தான் வன்முறைக் கலாச்சாரத்தில் ஈடுபடுவதாக ஐநா சபையில் இந்தியா குற்றம் சாட்டி உள்ளது.
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில், ஐ.நா.வுக்கான இந்தியத் தூதரக அதிகாரி விதிஷா மைத்ரா பேசும்போது, அமைதிக் கலாசாரம் என்பது மாநாடுகளில் விவாதிக்கப்படவும் கொண்டாடப்படவும் கூடிய வெறும் கோட்பாடு மட்டும் கிடையாது என்று குறிப்பிட்ட அவர், இந்தியாவுக்கு எதிரான வெறுப்பு பிரசாரத்தை மேற்கொள்வதற்காக ஐ.நா. தளத்தை பாகிஸ்தான் தற்போது மீண்டும் பயன்படுத்தியுள்ளது என்று குற்றம் சாட்டினார்.