பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறும் பிரிக்ஸ் கூட்டமைப்பு மாநாட்டில் பயங்கரவாத எதிர்ப்பு, ஆப்கானிஸ்தான் விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகள் விவாதிக்கப்பட உள்ளன.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதன் 13 வது உச்சி மாநாடு பிரதமர்மோடி தலைமையில் காணொலி வாயிலாக இன்று நடைபெறுகிறது. சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் ஆகியோரும், பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
ஐக்கிய நாடுகள், சர்வதேச நிதியம் ஆகியவற்றில் சீர்திருத்தங்கள், தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள், மின்னணு தொழில்நுட்பங்கள் வாயிலான வளர்ச்சி, மக்களுக்கு இடையேயான கலாச்சார மற்றும் தகவல் பரிமாற்றங்கள் தொடர்பாக இம்மாநாட்டில் விவாதம் நடைபெறவுள்ளது.
ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கு பிரதமர் மோடி தற்போது இரண்டாவது முறையாக தலைமையேற்பது குறிப்பிடத்தக்கது.