அசாமின் பிரம்மபுத்திரா ஆற்றில் இரு படகுகள் மோதிக் கொண்ட விபத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஜோர்ஹட் மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்தில் ஒரு படகு தண்ணீரில் மூழ்கியதால், அதில் இருந்த பயணிகள் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர். சிலர் தண்ணீரில் குதித்து நீச்சலடித்து மற்றொரு படகில் ஏறினர்.
ஒரு குழந்தை உள்பட 35 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் ஒரு பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுமார் 40 பேர் மாயமாகி இருப்பதால் மீட்புக்குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்து குறித்து வருத்தம் தெரிவித்துள்ள பிரதமர், பயணிகளை மீட்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.