டெல்லி வந்துள்ள ரஷ்ய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நிகோலாய் பாட்ருஷேவ் தலைமையிலான குழுவினர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து ஆப்கன், சீனா மற்றும் பாகிஸ்தான் தொடர்பான விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
முக்கியமாக ஆப்கனில் தலிபான்கள் அதிகாரத்திற்கு வந்த பிறகு, உருவாக வாய்ப்புள்ள அச்சுறுத்தல்கள் குறித்து இந்த சந்திப்பின் போது பேசப்பட்டதாக பிரதமர் அலுவலக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆப்கன் மண்ணில் இருந்து எந்த நாட்டுக்கும் எதிரான பயங்கரவாத செயல்கள் நடத்தப்படக்கூடாது என்பதில் இரு நாடுகளும் உறுதியாக இருப்பதாக அப்போது தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே டெல்லி வந்துள்ள அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ-வின் தலைவர் வில்லியம் பர்ன்ஸ் தமது குழுவினருடன் அஜித் தோவலை சந்தித்தார்.
அப்போது ஐ.நா தடைகள் மற்றும் அமெரிக்காவால் தீவிரவாதிகளாக அறிவிக்கப்பட்டவர்கள் ஆப்கனில் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், அதனால் என்னவென்ன விளைவுகள் ஏற்படும்? என்பது குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.