ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க விரும்பும் நிறுவனங்கள் நிதிசார் ஒப்பந்தப் புள்ளிகளை செப்டம்பர் 15ஆம் நாளுக்குள் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசுத் துறை நிறுவனமான ஏர் இந்தியாவைத் தனியாருக்கு விற்க அரசு முடிவு செய்தது. டாட்டா குழுமம் ஏர் ஏசியா மூலம் இதில் பங்கேற்றதுடன் நாடு முழுவதும் உள்ள ஏர் இந்தியா சொத்துக்களை அதன் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
விருப்பம் தெரிவித்தவர்களில் தகுதியான நிறுவனங்களைத் தெரிவு செய்து அவற்றிடம் இருந்து நிதிசார் ஒப்பந்தப் புள்ளிகளை அரசு வரவேற்றுள்ளது.
செப்டம்பர் 15ஆம் நாளுக்குள் இந்த ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்படும். அதிகத் தொகைக்குக் கேட்பவர்களுக்கு ஏர் இந்தியா நிறுவனத்தைக் கைம்மாற்றுவதற்கான நடவடிக்கைகள் அதன்பின் தொடங்கும்.