அமிர்தசரசில் உள்ள பொற்கோவில் நேற்று இரவு விழாக் கோலம் பூண்டிருந்தது. மின்விளக்குகளில் பொற்கோவில் ஜொலிக்க வாணவேடிக்கைகள் கண்களைக் கவர்ந்தன.
1604 ஆம் ஆண்டு இதே தினத்தில் 5 வது சீக்கியர் குரு அர்ஜூன் தேவ் தலைமையில் குரு கிராந்த சாகிப் புனித நூல் முதன்முறையாக முழுவதுமாக ஓதப்பட்ட நாளை சீக்கியர்கள் பிரகாச பூரப் என்று ஆண்டுதோறும் திருநாளாகக் கொண்டாடி வருகின்றனர்.
முன்னதாக காலையில் நகரின் முக்கிய வீதிகளல் ஆன்மீகப் பேரணி ஒன்றும் நடைபெற்றது. அதில் சீக்கியர்கள் வாள் சுழற்றி வீரதீர சாகசங்களை நடத்தினர்.