சிறையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக அடைபட்டிருக்கும் 97 கைதிகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால பெயில் வழங்கி உத்தரவிட்டது.
உத்தரப்பிரதேசத்தின் ஆக்ரா மற்றும் வாரணாசி சிறையில் உள்ள கைதிகள் விசாரணை நீதிமன்றத்தின் நிபந்தனைகளுடன் பெயிலில் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.
கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் கொள்கை தொடர்பான விளக்கம் அளிக்க உத்தரப்பிரதேச அரசுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.