இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை அருகே பாகிஸ்தான் விமானத் தளங்களை இயக்கி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாலக்கோட் தாக்குதலின்போது, இந்திய போர் விமானங்களின் நடமாட்டத்தை முன்கூட்டியே கணிக்க முடியாத சூழல் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டது. இதையடுத்து இந்திய எல்லை அருகே, கொட்ளி மற்றும் ராவல்கோட்-டில் நீண்ட நாட்களாக பயன்பாடின்றி இருந்த 2 விமானத் தளங்களை பாகிஸ்தான் மீண்டும் இயக்கத் தொடங்கி உள்ளது.
அதே சமயம் பாகிஸ்தானுக்குச் சொந்தமான 12 விமானத் தளங்களையும் இந்திய ராணுவ ரேடார்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.