தெலுங்கானாவில் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நெருக்கடி, பெட்ரோல் விலை உயர்வு உள்ளிட்டவற்றால் மனம் நொந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், தனது ஆட்டோவை நடுரோட்டில் தீ வைத்து கொளுத்திய காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஹனுமகொண்டா மாவட்டம் குண்டலசிங்கரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் என்பவர், தனியார் நிதி நிறுவனத்தின் மூலம் கடனில் ஆட்டோ வாங்கி ஓட்டி வந்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு, தொடர் பெட்ரோல் விலை ஏற்றம் உள்ளிட்டவை காரணமாக சவாரிக்கான கட்டணத்தை உயர்த்தியதால், ஆட்டோ பயணத்தை பெரும்பாலான மக்கள் தவிர்த்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.
இதனால் வருமானம் குறைந்து, ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நெருக்கடி அதிகரித்ததால், நொந்துபோய் ஸ்ரீனிவாஸ், தானே தனது ஆட்டோவை பெட்ரோல் ஊற்றி எரித்ததாகக் கூறியுள்ளார்.