ட்ரோன் எதிர்ப்பு அமைப்பைத் தயாரிக்க ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையுடன், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓ. கையெழுத்திட்டுள்ளது. ஜம்முவில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக BEL நிறுவனத்துடன் இணைந்து ட்ரோனைக் கண்டறிதல், அதனை அழித்தல் போன்ற செய்கைகளுக்காக டிஆர்டிஓ இணைந்து கையெழுத்திட்டதாக அவர் குறிப்பிட்டார். அவசரகால ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி இதற்கான ஒப்பந்தம் கையொப்பம் ஆனதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.