டோக்கியோ பாராலிம்பிக் உயரந் தாண்டும் போட்டியில் இந்தியாவின் பிரவீன் குமார் ஆசிய சாதனை படைத்ததுடன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
முன்னதாக 2 மீட்டர் ஒரு சென்டிமீட்டர் உயரம் தாண்டியிருந்த அவர் இறுதிப் போட்டியில் 2 மீட்டர் 7 சென்டிமீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் பெற்றார். பிரிட்டன் வீரர் ஜோனதன் புரூம் எட்வர்ட்ஸ் தங்கப்பதக்கம் பெற்றார்.
பாராலிம்பிக் போட்டியில் பிரவீன்குமார் வெள்ளிப் பதக்கம் வென்றது பெருமிதம் அளிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஈடிணையற்ற அர்ப்பணிப்பு, கடின முயற்சி ஆகியவற்றால் இந்தப் பதக்கம் கிடைத்துள்ளதாகவும் பிரதமர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.