இந்திய அமெரிக்க இருதரப்பு உறவுக்கான பேச்சுவார்த்தை வாஷிங்டனில் நடைபெற்றது.
இரு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் கடந்த ஆண்டு சந்தித்துப் பேசியபின் நடைபெற்ற நேரடிப் பேச்சுவார்த்தை இதுவாகும்.
வெளியுறவுச் செயலர் ஹர்ஷ் சிருங்கலா, அமெரிக்க துணை அமைச்சர் வெண்டி ஷெர்ம இடையிலான இந்த சந்திப்பில், இருதரப்பு வர்த்தகம், பாதுகாப்பு , சைபர் குற்றம் தடுப்பு, இந்தோ பசிபிக் தடையற்ற வர்த்தகம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கெனை சந்தித்த சிருங்காலா, ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலவரம் குறித்து விவாதித்தார்.