5 முதல் 18 வயது பிரிவினரிடம் சில நிபந்தனைகளுடன் இரண்டு மற்றும் 3ம் கட்ட தடுப்பூசி சோதனையை நடத்த பயாலஜிகல்-இ நிறுவனத்திற்கு தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பயாலஜிகல்- இ நிறுவனத்தால் முற்றிலும் இந்தியாவிலேயே தயாரான Corbevax தடுப்பூசியை சோதித்து பார்க்கலாம் என்ற தடுப்பூசி நிபுணர் குழுவின் பரிந்துரையை தொடர்ந்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. RBD புரோட்டீன் அடிப்படையிலான இந்த தடுப்பூசியின் இரண்டு மற்றும் 3 ஆம் கட்ட சோதனைகள் தற்போது பெரியவர்களிடம் நடத்தப்பட்டு வருகிறது.
இது செலுத்தப்படும் போது கொரோனா ஸ்பைக் புரோட்டீனை உற்பத்தி செய்து, உடலில் அதற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும். இந்த தடுப்பூசியை 3 டோஸ்கள் போட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.