உச்சநீதிமன்றத்திற்கு நியமனம் செய்யப்பட்ட 9 நீதிபதிகள் நாளை பதவியேற்க உள்ளனர்.
அவர்களுக்குத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். மூன்று பெண் நீதிபதிகள் உள்பட 9 பெண் நீதிபதிகளின் பெயர்களை உச்சநீதிமன்றத்தின் கொலிஜீயம் அமைப்பு பரிந்துரை செய்திருந்தது. 22 மாதங்களுக்குப் பிறகு இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
கடந்த வியாழக்கிழமை குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததையடுத்து நீதிபதிகள் பதவியேற்க உள்ளனர்.இதன் மூலம் உச்சநீதிமன்றத்தின் பலம் 24 லிருந்து 33 ஆக அதிகரிக்கும். சுமார் 69 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் உச்சநீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள் நியமனம் விசாரணைகளைத் துரிதப்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.