மத்திய பிரதேச மாநிலம் பன்னாவில் விவசாயி ஒருவரின் குவாரியில் இருந்து 2 ஆண்டுகளில் 6வது முறையாக வைரக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பிரகாஷ் மஜும்தார் என்ற விவசாயி ஜருபூர் கிராமத்தில் அரசு நிலத்தை குத்தகைக்கு எடுத்து குவாரி நடத்தி வரும் நிலையில், அங்கிருந்து அவருக்கு 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 6.47 கேரட் எடைக்கொண்ட வைரம் கிடைத்துள்ளது.
இதேபோல், அவரது குவாரியில் இருந்து 7.44, 2.5 கேரட் வைரங்கள் உள்ளிட்ட வைரகற்கள் 5 முறை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.