மகாராஷ்டிர மாநிலம் நாசிக், அவுரங்காபாத் மாவட்டங்களில் தக்காளி விலை கடும் வீழ்ச்சியடைந்தால், சந்தைக்குக் கொண்டுவந்த தக்காளிப் பழங்களைச் சாலையில் குவியலாகப் போட்டுவிட்டு விவசாயிகள் சென்றனர்.
தக்காளி நல்ல விளைச்சல் கண்டுள்ள நிலையில் நாசிக், அவுரங்காபாத் சந்தைகளில் ஒரு கிலோ 2 ரூபாய், 3 ரூபாய் என்கிற அளவிலேயே விற்பனையாகிறது. பறித்த கூலி, வண்டிச் செலவு ஆகியவற்றுக்குக் கூட இந்த விலை கட்டுப்படியாகாததால் தக்காளியைக் கொண்டுவந்த விவசாயிகள் அவற்றைப் பெட்டி பெட்டியாகச் சாலையில் கொட்டினர்.
டிராக்டர்களில் குவியலாகக் கொண்டுவந்த தக்காளிகளையும் இதேபோல் சந்தைக்கு வெளியே குவித்துவிட்டுச் சென்றனர்.