தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஸ் இ முகமது இயக்கத்தினர், இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகப் பாதுகாப்பு உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
ஆப்கானிஸ்தான் முழுவதையும் தாலிபான்கள் கைப்பற்றியபோது அங்குள்ள சிறைகளில் இருந்து ஜெய்ஸ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த சுமார் நூறு பேரை விடுவித்துள்ளனர்.
அவர்கள் மீண்டும் அந்தப் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்துள்ள நிலையில் இந்தியாவில், குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளதால் பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.