திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு இயற்கை வேளாண் பொருட்களால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் பரிமாறப்பட்டன.
சம்பிரதாய போஜனம் என்ற பெயரில் இயற்கை வேளாண் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய உணவுகளை லாப நோக்கமின்றி பக்தர்களுக்கு விற்பனை செய்ய திருப்பதி தேவஸ்தானம் முடிவெடுத்துள்ளது. அதற்காக அன்னமய்யா பவனில் சோதனை முயற்சியாக மூன்று வேளையும் பக்தர்களுக்கு இலவசமாக உணவளிக்கப்பட்டது.
இந்த வாரம் முழுவதும் தினமும் 500 பக்தர்களுக்கு உணவளித்து அவர்களது கருத்துகளை கேட்க தேவஸ்தான போர்டு திட்டமிட்டுள்ளது.