கோவிஷீல்ட், கோவாக்சின், ஸ்புட்னிக் ஆகிய தடுப்பூசிகள் செலுத்துவதற்கான இடைவெளியை குறைக்கும் திட்டம் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தேசிய தடுப்பூசி ஆலோசனைக்குழுவின் தலைவர் டாக்டர் NKஅரோரா செய்தியாளர்களிடம் பேசுகையில், தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்த ஆய்வுகள் தொடர்வதாக தெரிவித்தார். தற்போது முதல் தடுப்பூசிக்கும் இரண்டாவது தடுப்பூசிக்கும் இடையே 12 முதல் 16 வார காலங்கள் வரை இடைவெளி விடப்பட்டுள்ளது.
இதனை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியான நிலையில் அரசுத்தரப்பில் மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது.