உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கு கொலிஜீயம் அமைப்பு பரிந்துரைத்த 9 நீதிபதிகளின் பெயர்களுக்கு பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் உள்பட 9 பெயர்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் கர்நாடக உயர்நீதிமன்ற பெண் நீதிபதி நாகரத்தினா உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்று சில ஆண்டுகளில் உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாகவும் நியமனம் செய்யப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாய்ப்பு உருவாகியுள்ளது.