பொதுத்துறை வங்கி ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
இதன்படி ஊழியர் ஒருவர் பெற்ற கடைசி சம்பளத்தில் 30 சதவீத தொகையை ஓய்வூதியமாக குடும்பத்தினர் பெற முடியும். வங்கி ஊழியர்களின் குடும்பத்துக்கு 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை குடும்ப ஓய்வூதியமாகக் கிடைக்கும்.
தேசிய ஓய்வூதிய திட்டத்துக்கு பங்களிப்பு தற்போதைய 10 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது. இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒப்புதல் அளித்துள்ளார்.