எல்லைப் பாதுகாப்புப் படை தலைமை இயக்குநராக பங்கஜ் குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
1988ம் ஆண்டு ராஜஸ்தான் கேடர் ஐ.பி.எஸ். அதிகாரியான இவர், தற்போது எல்லைப் பாதுகாப்புப் படையின் சிறப்புத் தலைமை இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். வரும் 31ந் தேதி பொறுப்பேற்றுக் கொள்ளும் பங்கஜ்குமார் சிங், அடுத்த ஆண்டு டிசம்பர் 31ந் தேதி வரை பதவியில் நீடிப்பார்.
பங்கஜ்குமாரின் தந்தையும் கடந்த காலத்தில் இதே பொறுப்பை வகித்துவந்துள்ளார்.