உத்தர பிரதேசத்தில் நாளை முதல் 4 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், சிறப்பு ரயிலில் அயோத்தியா செல்வதுடன் அங்கு ராமர் கோவில் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு பூஜை செய்கிறார்.
நாளை லக்னோ செல்ல உள்ள அவர் இரண்டு தினங்கள் அங்கு இரண்டு பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் முன்னாள் முதலமைச்சர் சம்பூர்னானனந்தின் சிலை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
28 ஆம் தேதி கோரக்பூரில் பல்கலைகழக துவக்கம் மற்றும் அடிக்கல் நாட்டு விழாக்களில் பங்கேற்ற பின்னர் 29 ஆம் தேதி லக்னோவில் இருந்து சிறப்பு ரயிலில் அயோத்தியா ராமர் கோவிலுக்கு செல்வார் என அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது