சந்திரயான்-2 திட்ட தகவல்களை கொண்டு அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அறிவித்துள்ளது.
இஸ்ரோ வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், நிலவு குறித்து ஆய்வில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள் நிலவின் புவியியல், மேற்பரப்பின் வயது, அமைப்பு, கற்கள், தண்ணீர் இருப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்ய சந்திரயான்-1 திட்ட தகவல்கள் வெளியிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
அதேபோல் சந்திரயான்-2 ஆய்வு கருவிகள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டிருப்பதாகவும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள், அரசு அமைப்புகள் இத்தகவல்களை ஆராய முன்வரலாம் என இஸ்ரோ அறிவித்துள்ளது.