லடாக் பகுதியில் மேகவெடிப்பின் போது காணாமல் போன 17 கிராமவாசிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
லே அருகில் உள்ள ராம்போக் என்ற இடத்தில் நேற்று மாலை மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டியதால் ஜன்ஸ்கர் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு உண்டானது. இதில் ராம்போக் கிராமத்தைச் சேர்ந்த 17 பேர் மாயமாகினர். இதையடுத்து அவர்களைத் தேடும் பணியில் உள்ளூர் போலீசாரும் லே மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தினரும் ஈடுபட்டிருந்தனர்.
இறுதியில் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப் படையினரும் களமிறங்கி நடத்திய தேடுதல் வேட்டையில் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.