கடைசி 14 நாட்கள் இந்தியாவில் வசிக்காமல் வெளிநாடுகளில் வசித்த இந்தியர்களுக்கு சுற்றுலா விசா வழங்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவெடுத்துள்ளது.
இதுவரை வெளிநாடுகளில் வசிக்கும் ஐக்கிய அரபு அமீரக குடிமக்களுக்கு மட்டுமே தாயகம் திரும்ப அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்ததால் இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ளவர்கள், கடைசி 14 நாட்கள் வெளிநாடுகளில் தங்கி இருந்தால் அவர்களுக்கு சுற்றுலா விசா அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு செல்பவர்களுக்கு அன்றைய தினமும், அடுத்த ஒன்பதாவது நாளும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தியர்கள் மட்டுமின்றி, நேபாளம், நைஜீரியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் உகாண்டா நாட்டினருக்கும் இதே நடைமுறையில் சுற்றுலா விசா வழங்கப்பட உள்ளது.