சகோதர அன்பை வெளிப்படுத்தும் வகையிலான ரக்சா பந்தன் விழா நாட்டின் பல்வேறு நகரங்களில் கொண்டாடப்பட்டது. வட இந்தியாவில் சிராவண மாதத்தின் பவுர்ணமி நாள் ரக்சா பந்தன் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி மத்தியப் பிரதேசம் உஜ்ஜைனில் மகாகாளேஸ்வரர் கோவிலில் சிவலிங்கத்துக்கு ராக்கிக் கயிறு கட்டிவிட்டனர். டெல்லியில் மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்விக்கு அமைச்சர் நிரஞ்சன் ஜோதி ராக்கி கயிறு கட்டிவிட்டார். ஒடிசாவின் பவானிபட்னாவில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்குப் பெண் பாதுகாவலர் ராக்கி கயிறு கட்டிவிட்டார்.
ரக்சா பந்தன் விழாவையொட்டிக் கொல்கத்தாவில் பிரதமர் மோடி, முதலமைச்சர் மம்தா பானர்ஜி படங்கள் பொறித்த ராக்கிக் கயிறுகள் அதிகம் விற்பனையாயின. மகாராஷ்டிரத்தின் நாக்பூரில் உள்ள நகைக்கடைகளில் தங்கம், வெள்ளி ஆகியவற்றிலான சங்கிலிகள் அதிகம் விற்பனையாயின.