ஸைடஸ் கெடிலாவின் ஸைகோவ்-டி தடுப்பூசிக்கு தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அவசரகால பயன்பாட்டுக்கான அங்கீகாரம் வழங்கியதை பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.
டுவிட்டரில் தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ள அவர், கொரோனாவுக்கு எதிரான போரில் இது ஒரு மிக முக்கியமான சாதனை என குறிப்பிட்டுள்ளார்.
உலகின் முதலாவது டிஎன்ஏ அடிப்படையிலான இந்த தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பது இந்திய விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு திறனுக்கு ஒரு சாட்சி என்றும் மோடி வர்ணித்துள்ளார்.
ஸைகோவ்-டி தடுப்பூசி, 12 வயதுக்கு மேற்பட்ட பிரிவினருக்கு போட தகுதி வாய்ந்தது என்பதால், 12 முதல் 18 வயது பிரிவினருக்கான தடுப்பூசி திட்டத்தை உடனே துவங்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.