புதிய பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை மூடப்பட்ட கல்லூரிகளின் எண்ணிக்கையை விடக் குறைந்துள்ளது.
நாடு முழுவதும் பொறியியல் கல்லூரிகளில் 15 லட்சத்து 48 ஆயிரம் இடங்கள் நிரப்ப அனுமதிக்கப்பட்ட நிலையில் நிலையில், 2021-2022ல் இந்த எண்ணிக்கை 12 லட்சத்து 86 ஆயிரமாக குறைந்துள்ளது.இதற்கு கல்வித்தரம், கட்டமைப்பு வசதி, கட்டணம் போன்றவையே காரணம் என்று கூறப்படுகிறது.
நடப்பாண்டில் 63 கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் 500க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்குவதற்கான உரிமத்தைப் புதுப்பிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.