ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் "அப்னி பார்ட்டி" கட்சியின் நிர்வாகியான குலாம் ஹசனை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
சில நாட்களுக்கு முன்பு பாஜகவின் காஷ்மீர் தலைவர்களில் ஒருவரான ஜவீத் அகமது தார் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதே போல் பாஜகவின் கிராம அதிகாரியும் அவர் மனைவியும் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக தீவிரவாதிகள் குலாம் ஹசன் மீதும் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் தொடுத்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குலாம் ஹசன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.