சிறை கைதிகளின் வாழ்க்கை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒரு நாள் கைதி திட்டம் கர்நாடகாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பெலகாவியில் உள்ள ஹிண்டல்கா சிறையில், 500 ரூபாய் கொடுத்தால் ஒரு நாள் முழுவதும் கைதியாக வாழும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு வருபவர்களுக்கு கைதியின் சீருடை, கைதி எண், கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு, கைதிகள் செய்யும் வேலைகள் ஆகியவை வழங்கப்படும். அவர்களும் கைதிகள் போலவே நடத்தப்படுவதோடு, எந்த சலுகைகையும் அளிக்கப்படாது.