உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திற்கு கர்நாடக பெண் நீதிபதி நாகரத்தினா உள்ளிட்டோர் அடங்கிய 9 பெயர்களை உச்சநீதிமன்றத்தின் கொலிஜீயம் அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி. ரவிக்குமார் உள்ளிட்டோரின் பெயர்கள் இதில் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் நீதிபதி நாகரத்தினா, தெலுங்கானா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஹிமா கோஹ்லி, குஜராத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதி பேலா திரிவேதி ஆகிய மூன்று பெண் நீதிபதிகளின் பெயர்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.