இந்தியாவும் ஐநாவும் தொழில்நுட்பம் மற்றும் அமைதி காத்தல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளன.
நியுயார்க் சென்றுள்ள மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், ஐநா.பொதுச்செயலாளர் அந்தோனியோ கட்டாரஸை சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார். இது தொடர்பாக தமது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ஜெய்சங்கர், இந்தப் பேச்சுவார்த்தை ஆப்கானை மையமாகக் கொண்டிருந்தது என்று தெரிவித்துள்ளார்.
இன்றும் நாளையும் நடைபெறும் ஐநா.பாதுகாப்பு கவுன்சிலின் இரண்டு முக்கியக் கூட்டங்களிலும் ஜெய்சங்கர் தலைமை வகிக்க உள்ளார்.