மகாராஷ்டிராவில் மரபணு வரிசைப்படுத்துதல் சோதனைக்கு அனுப்பப்பட்ட 80 சதவிகித மாதிரிகளில் C மரபணு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அவர்களில் 76 பேருக்கு டெல்டா பிளஸ் மரபணு மாற்ற வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதில், 5 பேர் இறந்து விட்டதாகவும், 71 பேர் நோயில் இருந்து குணமடைந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 76 பேரில் 10 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் என்றும் 12 பேர் ஒரு டோஸ் போட்டுக் கொண்டவர்கள் என்றும், தற்போது டெல்டா பிளஸ் பாதித்த யாரும் சிகிச்சையில் இல்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்டா பிளஸ் வைரஸ் பாதித்து இறந்தவர்கள் அனைவரும் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் என தெரிவித்துள்ள சுகாதாரத் துறை அதிகாரிகள் அவர்களுக்கு தீவிரமான இணை நோய்கள் இருந்த தாகவும் கூறியுள்ளனர்.