கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள 7 ஆயிரத்து 200 கோடி ரூபாயை வெளியிட சுகாதார அமைச்சகத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பெருந்தொற்றின் 2வது அலையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஆயிரத்து 755 ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளை நடப்பு மாதத்திற்குள் கட்டமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களால் அமைக்கப்பட வேண்டிய ஆக்ஸிஜன் ஆலைகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டால், எதிர்காலத்தில் 2,200 ஆலைகள் செயல்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.