ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதியைச் சுட்டு வீழ்த்திய பாதுகாப்புப் படையினர், எறிகணைகள், கையெறி குண்டுகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.
குல்காமில் நேற்றிரவு எல்லைப் பாதுகாப்புப் படையினர் வாகனத்தில் சென்றபோது ஒரு கட்டடத்தில் இருந்து பயங்கரவாதிகள் இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். உடனடியாக அந்தப் பகுதியை ராணுவம், காவல்துறை, மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்கள் சுற்றி வளைத்தனர்.
இன்று காலை வரை நடந்த தேடுதல் வேட்டையில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி உஸ்மான் சுட்டுக்கொல்லப்பட்டார். அந்தக் கட்டடத்தில் இருந்து ஏகே 47 துப்பாக்கி, தோட்டாக்கள், எறிகணைகள், கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டதாகவும்,
இதன்மூலம் பெரிய தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் காவல்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.