2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து எதிர்கட்சித் தலைவர்களையும் காங்கிரஸ் செயல் தலைவர் சோனியா சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், உத்தவ் தாக்கரே, சரத்பவார், ஹேமந்த் சோரன், டி. ராஜா, சீத்தாராம் யெச்சூரி ஆகியோருடன் வரும் 20ம் தேதி காணொலி மூலம் சோனியா பேச இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
இதன் பின்னர் அடுத்த மாதம் அனைத்து தரப்பினரையும் நேரில் சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும், தேர்தல் தவிர பெகாசஸ் விவகாரம் குறித்தும் பேச உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.