நாடாளுமன்றத்தில் மேஜை மீது ஏறி நின்று எதிர்க்கட்சி எம்பிக்கள் அச்சுறுத்தும் வகையில் அமளியில் ஈடுபட்டதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்புகேட்க வேண்டும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரலஹாத் ஜோஷி வலியுறுத்தி இருக்கிறார்.
ராகுல்காந்தி எழுப்பிய குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக மத்திய அமைச்சர்கள் 8 பேர் கூட்டாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரலஹாத் ஜோஷி, எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளியால் தான் 2 நாட்கள் முன்னதாகவே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவித்தார்.
கடந்த 11 ஆம் தேதி எதிர்கட்சி எம்பிக்களின் செயல்பாட்டால், பெண் பாதுகாவலர் ஒருவர் காயடைந்ததாக அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார். இதனிடையே புதன்கிழமை அவை காவலர்களுடன் எதிர்க்கட்சி எம்பிகள் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.