அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் 70 விமானங்களை வாங்குவது குறித்து ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் ஆகாசா நிறுவனம் பேச்சு நடத்தி வருகிறது.
விமானப் போக்குவரத்தைத் தொடங்க மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ள ஆகாசா நிறுவனம், அனுமதி கிடைத்தால் 4 ஆண்டுகளில் 70 விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக A320neo விமானங்களை வாங்க ஏர்பஸ் நிறுவனத்துடன் பேச்சு நடத்தியதில், விமானப் போக்குவரத்துத் தொழில் வீழ்ச்சியடைந்துள்ளதால் அவ்வகை விமானங்கள் கிடைக்கவில்லை.
இதையடுத்து போயிங் 737 வகை விமானங்களை விலைக்கு வாங்கவும், குத்தகைக்கு வாங்கவும் அமெரிக்காவின் போயிங் நிறுவனத்துடன் பேச்சு நடத்தி வருகிறது. மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் இதற்கான உடன்படிக்கை இறுதியாகும் என்றும் கூறப்படுகிறது.