டெல்லியில் இன்று முதல் மின்சார பேருந்துகளை மெட்ரோ நிர்வாகம் இயக்க உள்ளது.மெட்ரோ பயண அட்டை உள்ள பயணிகள் மட்டும் இதனைப் பயன்படுத்த முடியும்.
சோதனை முயற்சியில் பயணிகளை அவர்கள் இருக்கும் இடங்களில் இருந்து குறிப்பிட்ட வழித்தடங்களில் அழைத்து வரவும் அவர்களைக் கொண்டு போய் விடவும் இந்தப் பேருந்து சேவை பயன்படுத்தப்படுகிறது. வழியில் யாரும் இந்தப் பேருந்தில் ஏற முடியாது .