ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டியில் விளையாடிய ஒடிசாவை சேர்ந்த 4 வீரர் வீராங்கனைகளுக்கு, முதலமைச்சர் நவீன் பட்நாயக் பரிசு வழங்கி கவுரவித்தார்.
புவனேஸ்வரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வெண்கலப் பதக்கம் வென்ற ஆண்கள் ஹாக்கி அணியில் இடம்பெற்ற துணை கேப்டன் பிரேந்திர லக்ரா மற்றும் அமித் ரோகிதாஸ் ஆகியோருக்கு தலா இரண்டரை கோடி ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் வழங்கினார்.
அதே போன்று அரையிறுதி வரை சென்று போராடிய மகளிர் ஹாக்கி அணியில் இடம்பெற்ற டீப் கிரேஸ் மற்றும் நமிதா ஆகியோருக்கு தலா 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை நவீன் பட்நாயக் வழங்கினார்.