பூமியில் ஏற்படும் தட்பவெட்ப மாறுதல்களைக் கண்காணிக்க ஜிஐசாட் செயற்கைக் கோள் ஜிஎஸ்எல்வி F10 ராக்கெட் மூலம் நாளை காலை 5.43 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது.
இதற்கான கவுண்ட் டவுன் இன்று அதிகாலை 3.43 க்கு தொடங்கியது. பூமியின் தட்பவெட்பநிலை, வெள்ளம் மற்றும் சூறாவளி போன்ற இயற்கை பேரழிவுகளை நிகழ்நேர தன்மையில் இந்த செயற்கைக்கோள் கண்காணிக்கும்.
பயிர்கள், தாவர நிலை, வனப்பகுதி மாற்றங்கள் உள்ளிட்டவைகளை கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள் உதவும்.