பிரதமரின் உழவர் உதவித்தொகை திட்டத்தின் கீழ், நடப்பு நிதியாண்டின் 2ஆவது தவணைத் தொகையை, பிரதமர் நரேந்திர மோடி இன்று விடுவிக்கிறார்.
இதன் மூலம் சுமார் பத்து கோடி விவசாயிகள் பலன் அடைவார்கள். பிரதமரின் உழவர் உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை 2 ஆயிரம் ரூபாய் வீதம் 3 தவணையாக ஆண்டுக்கு மொத்தம் 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.
இது, விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும். இந்த திட்டத்தின் கீழ், இதுவரை சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் நிதி உதவி, விவசாய குடும்பங்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமரின் உழவர் உதவித் தொகை திட்டத்தின் கீழ், நடப்பு நிதியாண்டின், 2ஆவது தவணைக்கான, 19 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதியை பிரதமர் இன்று நண்பகலில் நடைபெறும் நிகழ்வில் பிரதமர் விடுவிக்கிறார்.