கர்நாடகத்தின் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு நேற்று 14ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் இன்று நொடிக்கு 21 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
124 புள்ளி 8 அடி உயரமுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் 118 புள்ளி 8 அடிக்குத் தண்ணீர் உள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு நொடிக்கு 23 ஆயிரத்து 890 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், ஐயாயிரம் கன அடி நீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
84 அடி உயரமுள்ள கபினி அணையில் 82 அடிக்குத் தண்ணீர் உள்ளது. அணைக்கு நொடிக்கு 13 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், 16 ஆயிரம் கன அடி நீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் ஒகேனக்கல்லில் காவிரியில் நீர்வரத்து ஒன்பதாயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகத்தில் இருந்து அதிக அளவில் நீர் திறக்கப்பட்டுள்ளதால் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.