புது டெல்லியில் ஏற்படும் காற்றுமாசு காரணமாக ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக சுற்றுச்சூழல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும், ஆலைகளால் யமுனையில் கலக்கப்படும் ரசாயனக் கழிவுகள், குப்பைகள், போன்றவற்றால் யமுனை நதி நிறம் மாறி காட்சியளிப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக தாஜ்மகால் மீது படியும் கறைகள் நிரந்தரமான கறைகளாக மாறி அதன் பொலிவை பாதிக்கும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றான பளிங்கு மாளிகையான தாஜ் மகாலை பாதுகாப்பதற்கான வலியுறுத்தல் அதிகரித்த வண்ணம் உள்ளது.
அண்மையில் கனமழை பெய்ததால் டெல்லியில் இருந்து யமுனையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்தனை அழுக்கையும் ஆற்றுவெள்ளம் அடித்து தாஜ்மகாலுக்குக் கொண்டு வருகிறது. ஆயினும் தண்ணீர் தன்னைத் தானே சுத்தம் செய்துக் கொள்ளும் என்று மாநகராட்சி கூறுகிறது.