காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் சர்ச்சைக்குரிய பதிவை நீக்கிய டுவிட்டர் நிறுவனம் தற்போது அவர் கணக்கையே தற்காலிகமாக முடக்கியுள்ளது.
இதுதொடர்பாக பேசியுள்ள காங்கிரஸ் கட்சி, முடக்கத்திலிருந்து, டுவிட்டர் பக்கத்தை மீட்டெடுத்து சீரமைக்க முயற்சித்து வருவதாக விளக்கம் அளித்துள்ளது. அதுவரை, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட இதர சமூக ஊடக தளங்களில் ராகுல் காந்தியைப் பின்தொடரும்படியும் காங்கிரஸ் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து தெரிவிக்க டிவிட்டரைப் பயன்படுத்த முடியாமல் ராகுல் காந்தி இன்ஸ்டாகிராம் மூலம் வாழ்த்துச் செய்திகளைப் பரிமாறிக் கொண்டார்.
டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோர் படத்தை வெளியிட்டதால் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, ராகுலின் டுவிட்டர் பதிவை அந்நிறுவனம் நீக்கியது. இதனைத் தொடர்ந்து அவருடைய டுவிட்டர் கணக்கும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.