”அபூர்வ சகோதரர்கள்” திரைப்படத்தில் வரும் ”அண்ணாத்த ஆடுறார்” பாடலின் ஹிந்தி டப்பிங் பட பாடலுக்கு, மும்பை காவலர் ஒருவர் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.
38 வயதாகும் அமோல் யாஷ்வந்த் காம்ப்ளி சிறு வயது முதலே நடனமாடுவதில் இருந்த ஈடுபாட்டால் கச்சேரிகளில் நடனமாடி வந்துள்ளார். மும்பை காவல்துறையில் பணியாற்றத் தொடங்கிய பிறகும் விடுமுறை மற்றும் ஓய்வு நேரங்களில் நடனமாடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
அவ்வாறு, ”அண்ணாத்த ஆடுறார்” பாடலின் ஹிந்தி டப்பிங்கிற்கு முகக்கவசம் அணிவது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவர் நடனமாடிய வீடியோ 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்ஸ்களை அள்ளியது.