கொரோனா நிவாரண நடவடிக்கைகளின் போது முதல் நாளில் இருந்தே ஏழைகளுக்கு முதல் முன்னுரிமை கொடுத்து வருவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் ஏழைகளுக்கான நலத்திட்டத்தில் இலவச உணவு தானியம் பெறும் பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலியில் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், ஏழைகளுக்கு உணவு மற்றும் வேலைவாய்ப்பு வழங்குவது பற்றி ஊரடங்கின் முதல் நாளில் இருந்தே சிந்தித்து வந்ததாகத் தெரிவித்தார்.
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் 80 கோடிப் பேர் இலவச உணவுதானியங்களைப் பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார். விழாக்காலங்களில் கைத்தறித் துணிகள், கைவினைப் பொருட்களை வாங்கி உள்நாட்டுத் தொழிலை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.