ஒலிம்பிக் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் வந்தனா கட்டாரியாவுக்கு (Vandana Katariya) 25 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் என்று உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
ஜூலை 31-ல் தென் ஆப்ரிக்காவுடனான போட்டியில் அடுத்தடுத்து 3 கோல் அடித்து, ஒலிம்பிக் ஹாக்கியில் ஹாட்ரிக் அடித்த இந்திய மகளிர் அணியின் முதல் வீராங்கனை என்ற கவுரவத்தைப் பெற்றார் வந்தனா. அவர் அடித்த கோல்களால் அந்த போட்டியில் இந்திய அணி 4-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.
அதை அங்கீகரிக்கும் வகையில் 25 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் என்று உத்தரகாண்ட் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.