ஏற்றுமதியை அதிகரிப்பது தொடர்பாக, வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதர்கள் மற்றும் வர்த்தக பிரதிநிதிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடினார்
உலக நாடுகளில் உள்ள இந்திய தூதர்கள் மற்றும் சர்வதேச வர்த்தகத் துறை பங்குதாரர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடினார். இந்தியத் தூதர்களுடன் பிரதமர் உரையாடுவது இதுவே முதல் முறையாகும்.
இந்தியா 75 வது சுதந்திர ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு எதிர்கால இந்தியாவுக்கு தெளிவான திட்டங்களை வகுக்க பிரதமர் இந்த கலந்துரையாடலைத் தொடங்கியுள்ளார்.
தொழில்நுட்பம் வளர்ச்சி மற்றும் நிதித்துறை இணைப்புகள் காரணமாக ஏற்றுமதியை அதிகப்படுத்த உலகம் முழுவதும் புதிய வாய்ப்புகள் திறந்திருப்பதாக தமது உரையில் மோடி குறிப்பிட்டார். மாநில அரசுகள் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும்படி வலியுறுத்தி வருவதாகவும் மோடி தெரிவித்தார்.
உள்நாட்டில் உள்ள வளங்களை பயன்படுத்தி, இந்தியாவின் உற்பத்தியை அதிகரித்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாக பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.
மத்திய வர்த்தக அமைச்சர் திரு. பியூஷ் கோயல், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், 20க்கும் மேற்பட் துறைச் செயலாளர்கள், மாநில அரசுகளின் உயரதிகாரிகள், ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.